இலங்கையில் இருந்து 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து 5 பேர் தமிழகத்தில் ஏதிலிகளாக நேற்று தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக அவர்கள் தமிழகம் இராமேஸ்வரத்தை அடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதுடன் மூன்று சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குடும்பத்தினர் வவுனியாவைச் சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

அவர்களிடம் கரையோர காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மண்டபம் முகாமில் தங்கவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Previous articleமுட்டை விலை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட வர்த்தமானி
Next articleகேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!