கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது!

பெரியநீலாவணை தொடர் மாடி வீட்டு திட்ட பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த 35 வயதுடைய நபரொருவர் பெரியநீலாவணை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

பெரியநீலாவணை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, நிலைய பொறுப்பதிகாரி ஆர்.டி.துஷார திலங்க ஜெயலால் வழிகாட்டலுக்கு அமைய குற்ற தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி. தினேஷ் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகத்துக்கு இடமான நபரை கைது செய்த போது அவரிடமிருந்து 860 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 35 வயதுடைய இளைஞர் கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கம் மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெரியநீலாவணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் இருந்து 5 பேர் தமிழகத்தில் தஞ்சம்
Next articleநாட்டின் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!