இலங்கை மக்களுக்கு மருத்துவ நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது அதிக வெப்பம் நிலவி வருவதால் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நாளில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றும் பரவி வருவதால் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால நுரையீரல் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென சுவாச நோய் தொடர்பான நிபுணர் துஷாந்த மெதகெதர தெரிவித்தார்.

கடும் வெப்பம் அதிகரித்தால் சலி காய்ந்து சுவாச பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

காலநிலை மாற்றம்

மேலும் தூசியின் அதிகரிப்பு ஏற்படுகின்றது. இவற்றினால் பாதிப்பு அதிகரிக்கும். சுவாசிக்க முடியாத வகையில் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட காலமாக சுவாச நோய்களால் அவதிப்படுபவர்கள் வெப்பமான காலநிலையினால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சுவாச நோய் தொடர்பான நிபுணரான வைத்தியர் துஷாந்த மத்கெதர மேலும் சுட்டிக்காட்டினார்.