செக்ஸ் தொல்லை கொடுக்கும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உடலில் தீக்காயங்களுடன், இளம்பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

4070616d-bf8c-47cd-bc50-895136433898_S_secvpfசென்னை ஆவடி, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஷோபா (வயது 38). இவர் தனது முகம், கைகள் மற்றும் மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த தீக்காயத்துடன் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம், தனது கணவரின் செக்ஸ் தொல்லை தாங்க முடியாமல், தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றதாகவும், தனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் தொல்லை கொடுக்கும் கணவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக கொடுத்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஷோபா கமிஷனர் அலுவலக அதிகாரிகளிடம் கண்ணீருடன் தனது சோக கதையை சொன்னார்.

இது தொடர்பாக புகார் மனு ஒன்றையும் அவர் கொடுத்தார். கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயராக வேலை பார்ப்பதாகவும், தனது உறவினரான அவர் தனக்கு 2–வது கணவர் என்றும் அவர் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவரது புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

Previous articleசிங்கள மாணவர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடு ; யாழ். பல்கலைக்கழக நிர்வாகம்?
Next articleஜெயலலிதா மீது குஷ்பு கடும் தாக்கு