சிறிலங்காவின் அதி முக்கியஸ்த்தர் ஒருவர் கைது செய்யப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை தடுத்து வைப்பதற்காக, வெலிக்கடை சிறையின் எஸ் சிறைக்கூடம் சீரமைக்கப்பட்டு வருகிறது.
இந்த சிறையிலேயே விஜயகுமாரதுங்க, சரத் பொன்சேகா போன்றவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். அதில் புதிதாக கைது செய்யப்படவுள்ள முக்கியஸ்த்தர் தடுத்துவைக்கப்படவிருப்பதாக கூறப்படுகிறது.
கைதாகவுள்ளவர் கோட்டாபய ராஜபக்ஷவாகவோ, மகிந்த ராஜபக்ஷவாகவோ இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.