இலங்கையில் தேடப்பட்டு வந்த குற்றவாளி பிரான்சில் கைது!

  இலங்கையில் பல குற்றச்செயல்கள் தொடர்பில் தேடப்படும் குடுஅஞ்சு என்பவரை பிரான்ஸ் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

குடும்ப வன்முறை குற்றச்சாட்டின் பின்னரே குடுஅஞ்சு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பிரான்ஸில் வசித்துவந்த அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸ் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தெகிவளை படுகொலை

அவரை பிரான்சிலிருந்து இலங்கைக்கு அழைத்துவருவது குறித்து இலங்கை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.

குடு அஞ்சு கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையான தெகிவளை மவுண்டலவேனியா மாநகரசபை உறுப்பினர் ரஞ்சன் டி சில்வா படுகொலை உட்பட பல சம்பவங்கள் தொடர்பில் தேடப்பட்டுவருகின்றார்.

Previous articleஇலங்கை மக்களுக்கான முக்கிய செய்தி
Next articleவிபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!