மஹிந்த அணியை துாக்கி எறிந்த மைத்திரி

mr-tiamஜனாதிபதி மைத்ரி தலைமையில் இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு ஆரம்பமான சுதந்திர கட்சி கூட்டத்தில் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள் 7 ( அனைவரும் உள்ளூராட்சின்ற முன்னாள் தலைவர்கள்) பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அமைவாக சுதந்திர கட்சி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் 7 பேர் கட்சி அங்கத்துவம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு அவர்கள் கட்சியை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த ஏழு உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களும் மஹிந்த ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் கட்சி தலைமையையும் கட்சி தீர்மானங்களையும் விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை தராதரம் பாராமல் கட்சியை விட்டு நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள அதேவேளை பொது எதிரணியில் உள்ள சுதந்திர கட்சி உறுப்பினர்கள் பராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்க கோரப்பட்ட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Previous articleயாழ் சென்ற மங்கள சமரவீர தமிழரசு கட்சியினருடன் சந்திப்பு
Next articleஹம்பாந்தோட்டை மாவட்டமும் மஹிந்த வசம்…!