காலநிலை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் (05.05.2023) கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் குறிப்பாகப் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறிப்பிட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடல் பகுதிகள்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நாளைய (06.05.2023) முதல் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது.

எனவே, இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால கணிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கடற்றொழில் மற்றும் கடற்படை சமூகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்பில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு (25-35) கிலோமீற்றர் வரை காணப்படும்.

கடல் கொந்தளிப்பு
பேருவளையிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.