கனடாவின் மகிழ்ச்சியான நகரம் குறித்து வெளியாகியுள்ள செய்தி!

கனடாவின் மிகவும் மகிழ்ச்சிகரமான நகரமாக ஒன்றாரியோ மாகாணத்தின் கெல்டன் நகரம் பெயரிடப்பட்டுள்ளது.

நாட்டில் அதிக மகிழ்ச்சியான நகரமும், மகிழ்ச்சியற்ற நகரமும் ஒன்றாரியோ மாகாணத்தில் பட்டியலிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெயின்ட்2ஹோம்ஸ் என்னும் ரியல் எஸ்டேட் இணைய தளமொன்று மேற்கொண்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கனடாவின் சுமார் நூறு பெரிய நகரங்கள் தொடர்பில் இந்த கருத்துக் கணிப்பு முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரியல் எஸ்டேட், பொருளாதாரம், சுகாதாரம், சுற்றுச்சூழல், அமைவிடம், சனத்தொகை பரம்பல், மற்றும சமூகம், உள்ளிட்ட சில முக்கிய ஏதுக்களின் அடிப்படையில் இந்த பட்டிலிடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பட்டியலின் பிரகாரம் நாட்டின் முதல் பத்து மகிழ்ச்சியான நகரங்களில் ஏழு நகரங்கள் ஒன்றாரியோ மாகாணத்தில் காணப்படுகின்றது.

முதல் பத்து மகிழ்ச்சியற்ற நகரங்களின் வரிசையில் எட்டு நகரங்கள் ஒன்றாரியோவில் அமையப்பெற்றுள்ளது.

கனடாவின் மிகவும் மகிழ்ச்சியற்ற நகரமாக பேரேய் பட்டியலிடப்பட்டுள்ளது.  

Previous articleயாழில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த மாணவன்
Next articleகனேடிய நாணயதாளில் ஏற்ப்பட இருக்கும் மாற்றம்!