நயன்தாரா பற்றி புதிய தகவல்கள்

Nayantharaஇயக்குநர் சற்குணம், நயன்தாராவை கதையின் நாயகியாக நடிக்க வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருந்தது. இப்போது அந்த படத்தின் அதிகாரபூர்வ தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய தாஸ் ராமசாமி இயக்கும் இப்படத்தை சற்குணத்துடன் இணைந்து நேமிசந்த் ஜபக், ஹித்தேஷ் ஜபக் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் நயன்தாராவுடன் தம்பி ராமையா, ஹரிஷ் உத்தமன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

நகைச்சுவை கலந்த திகிலூட்டும் கிரைம் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகவிருக்கிறது. இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசை அமைக்கிறார்.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கும்.

Previous articleசம்பூர் கடற்படைத்தளம் விரைவில் மாற்றம்
Next articleயாழ் முதல் புத்தளம் வரையிலான கரையோரப் பகுதிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளனர்: ஹக்கீம்