யாழ் முதல் புத்தளம் வரையிலான கரையோரப் பகுதிகளை படையினர் ஆக்கிரமித்துள்ளனர்: ஹக்கீம்

Rauff-Hakeem-e1450285454534யாழ்ப்பாணம் முதல் புத்தம் வரையிலான கரையோரப் பகுதிகளை படையினர் ஆக்கிமித்துள்ளனர் என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் இந்தப் பகுதியில் பல முகாம்களை அமைத்துள்ளதாக அவர் நாடாளுமன்றில் குற்றம் சுமத்தியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…,

வடக்கு கிழக்கின் முக்கிய பகுதிகளை படையினர் ஆக்கிரமித்துக் கொண்டு வளங்களை சூறையாடி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சில நகரங்களைச் சுற்றி இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீள்குடியேற்றம் தொடாபில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் வரவேற்கப்பட வேண்டியவையாகும்.

புல்மோட்டை பொத்துவில் போன்ற பிரதேசங்கிளல் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். சில பகுதிகளில் வேலிகள் அமைத்து பிரிக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறான நிலைமையினால் இடைக்கிடை படையினருக்கும் மக்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

மக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் தந்திரோபாய ரீதியில் இராணுவ முகாம்களை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட வேண்டுமென ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றில் நேற்று கோரியுள்ளார்.

Previous articleநயன்தாரா பற்றி புதிய தகவல்கள்
Next article’வடகொரிய ஜனாதிபதியை கொல்ல வேண்டும்’: தென் கொரிய நாடாளுமன்ற உறுப்பினர் அதிரடி பேச்சு