கனடாவிற்கு சரியான பதிலடி வழங்கியுள்ள சீனா!

 சீன ராஜதந்திரி ஒருவரை நாடு கடத்தும் கனடாவின் தீர்மானத்திற்கு சீனா பதிலடி வழங்கியுள்ளது.

இதன்படி, சீனாவிலிருந்து ஒரு ராஜதந்திரி கனடாவிற்கு நாடு கடத்தப்பட உள்ளார்.

சீனாவின் ஷங்காய்க்கான கனடிய கொன்சோல் அதிகாரி ஜெனிபர் லெய்ன் இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார்.

சீனாவின் சட்டங்களுக்கு முரணாக செயற்பட்டதாக ஜெனிபர் மீது சீனா குற்றம் சுமத்தியுள்ளது.

எதிர்வரும் 13ம் திகதிக்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறுமாறு ஜெனிபருக்கு சீன அதிகாரிகளினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக கனடாவிற்கான சீன ராஜதந்திரி ஒருவரை நாடு கடத்தப் போவதாக கனடா அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஸாவோ வெய் என்ற சீன அதிகாரியை இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர ரீதியிலான முரண்பாட்டு நிலைமை அதிகரித்துள்ளது.

கனடிய உள்விவகாரங்களில் சீனா தலையீடு செய்வதாகவும் தேர்தலில் தலையீடு செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.