மட்டக்களப்பில் கொள்ளையில் ஈடுபட்ட சிறுவன் உட்பட ஆறு பேர் கைது !

  மட்டக்களப்பில் 6 வீடுகளை உடைத்து நகை மற்றும் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் 14 வயது சிறுவன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக இந்த கொள்ளைச்சம்பவம் பதிவாகியுள்ளது.

பணம் மற்றும் நகை கொள்ளை

4 வீடுகளின் கூரை மற்றும் யன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடி கனணி கையடக்க தொலைபேசிகள் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் திருட்டுபோயுள்ளது.

இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 25 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்வர்களை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் உட்பட 2 பேரையும் 14 நாட்டகள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.

மேலும் திருட்டு பொருட்களை வாங்கிய கடை முதலாளிமார்களான 4 பேரையும் நீதவான் பிணையில் விடுவித்தார்.