வேகவைக்காமல் பச்சையாகவே முட்டையை சாப்பிடலாமா?

eggeat_002 (1)முட்டையில் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிரம்பியுள்ளன.
அடங்கியுள்ள சத்துக்கள்

புரோட்டீன், விட்டமின்கள் A, B (B2, B12, B6, B5), D, E, முடி வளர்ச்சிக்குத் தேவையான பையோட்டின் (Biotin), நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் கல்லீரல் இயக்கத்தைச் சமநிலைப்படுத்தும் கோலின் (choline), போலேட் (folate) என்னும் விட்டமின், ஸியஸன்தின் (zeaxanthin) என்னும் ஆன்டிஆக்ஸிடன்ட், அயோடின், இரும்புச் சத்து போன்ற அனைத்து சத்துக்கள் உள்ளன.

பொதுவாக 44 – 50 கிராம் எடையுள்ள முட்டையில் 70 கிலோ கலோரிகள் எரிசக்தியும் (Energy), 6 கிராம் புரோட்டீனும் இருக்கும்.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

ஒரு வயது தாண்டிய குழந்தை கள் தொடங்கி முதியவர்கள்வரை யார் வேண்டுமானாலும் முட்டை சாப்பிடலாம். சில குழந்தைகளுக்கு முட்டை சாப்பிடுவதால் அலர்ஜி வரக்கூடும் என்பதால், ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு முட்டையை நிச்சயமாகத் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகளுக்கு முதலில் மஞ்சள் கருவையும், அதன் பிறகு வெள்ளைக் கருவையும் கொடுக்க வேண்டும். பொதுவாக, குழந்தைகளுக்கு முதன்முதலாக முட்டை கொடுக்க ஆரம்பிக்கும்போது முதலில் மஞ்சள் கருவை மட்டும் கொடுத்து, அது நன்கு செரித்து குழந்தையின் உடலுக்குத் தொந்தரவு ஏதும் செய்யவில்லை என்று உறுதிப்படுத்திய பின் வெள்ளைக் கருவையும் சேர்த்துக் கொடுக்க வேண்டும்.

எவ்வளவு சாப்பிடலாம்?

ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தொடங்கி 40 வயதுவரை உள்ளவர்கள், எடை குறைவாக இருக்கும்பட்சத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிடலாம். இதே வயது வரம்பில் சராசரி எடைகொண்டவர்கள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம்.

உடற்பருமனான குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை, வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முட்டை எடுத்துக்கொள்ளலாம். உடற்பருமன் உள்ளவர்களுக்கு மருத்துவப் பரிந்துரை அவசியம். 40 வயதைக் கடந்தவர்கள் தினமும் முட்டை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். வாரத்தில் 2 அல்லது 3 முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

வேகவைக்காத சாப்பிடலாமா?

வேகவைக்காத முட்டை சாப்பிட்டால் அதில் உள்ள ட்ரிப்சின் (trypsin) எனும் அமினோ ஆசிட் உடல் வளர்ச்சியைச் செயலிழக்கச் செய்யும். மேலும் டைஃபாய்டு வரக்கூடிய வாய்ப்புகளையும் அது உண்டாக்கலாம்.

குறிப்பாகக் குழந்தைகளுக்கு அதுபோன்ற தொந்தரவுகள் ஏற்பட்டால், சிகிச்சை எளிமையாக இருக்காது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும். முட்டையை வேகவைத்தோ அல்லது ஆம்லெட், பொரியல் என்று சமைத்தோதான் சாப்பிட வேண்டும்.

Previous articleஸ்வீட் எடு…காதலர் தினத்தை கொண்டாடு!
Next articleபிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன் – என்கிறார் கோத்தா