இலங்கை வருகிறாரா நடிகர் கமல்ஹாசன்!

  இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு இந்திய திரைப்பட நடிகர் உலகநாயகனும் , மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல் ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் சார்ளஸ் மன்னர் மற்றும் ராணி துணைவியாரின் முடிசூட்டு விழாவைக் கொண்டாடும் வகையில் சென்னையில் பிரிட்டிஷ் துணை உயர் ஸ்தானிகர் இரவு விருந்துபசாரமொன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் தென்னிந்தியாவிற்கான இலங்கையின் துணை உயர் ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரனும் பங்கேற்றார்.

நிகழ்வில் கமல்ஹாசனை சந்தித்த துணை உயர்ஸ்தானிகர், எதிர்காலத்தில் இலங்கைக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தாதவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் உலகநாயகன்  இலங்கைக்கு வருவாரா இல்லையா  என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்.

Previous articleதாய்லாந்தில் வேலை பெற்று தருவதாக கூறி அடிமைகளாக அடைத்து வைக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்
Next articleயாழ் மண்டைதீவு பகுதியில் கேரள கஞ்சா மீட்பு!