மன்னார் சிலாபத்துறை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொதிகள் மீட்பு

Download-4மன்னார் – சிலாபத்துறை காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சாப்பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

மதுவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

கடல் மார்க்கமாக வங்காலை கிராமத்திற்கு கொண்டு வரப்பட்ட கஞ்சாப்பொதிகள் சிலாபத்துறை காட்டுப் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதே மீட்கப்பட்டுள்ளது.

கஞ்சா பொதிகளை மறைத்து வைத்திருந்தவர்கள் தொடர்பாக எவரும் கைதுசெய்யப்படவில்லை என மன்னார் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்த மேலதிக விசாரணைகள் தாம் மேற்கொண்டுள்ளதாகவும், எதிர்வரும் 15 ஆம் திகதி கஞ்சா பொதிகள் மன்னார் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous articleபிரபாகரனே வடக்கிலுள்ள மக்களின் கதாநாயகன் – என்கிறார் கோத்தா
Next articleஐ.எஸ். தீவிரவாதிகள் செய்த கொடூர தண்டனை