திருமணமாகி மூன்று மாதங்களில் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட இளம் பெண்!

  மட்டக்களப்பில் திருமணமாகி 3 மாதங்களில் இளம் பெண் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.

அம்பிளாந்துறையை சேர்ந்த  இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாயத்துள்ளதாக கூறப்படும் நிலையில்,  கடந்த 12ஆம் திகதி எருவிலில் உள்ள கணவர் வீட்டில் அவரது சடலம் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டாம் திருமணம்

 அதேவேளை உயிரிழந்த பெண்ணுக்கு 3 மாதங்களின் முன்னரே திருமணமாகியதாகவும், ஏற்கெனவே திருமணமாகியதை மறைத்து கணவர் , அவரை இரண்டாம் திருமணம் செய்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கணவர் ஏமாற்றியதை அறிந்த  மனைவி உயிரை மாய்த்துக் கொண்டதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous articleயாழ் போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் Dr. சிவகுமாரன் காலமானார்
Next articleகிரீன் டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்