வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்

உலகின் முதனிலை சமூக ஊடக செயலிகளில் ஒன்றான வாட்ஸ்அப் புதிய ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்களின் அந்தரங்க தன்மையை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஓர் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட ஒரு நபருடனான குறுஞ்செய்தி பரிமாற்றத்தை (Chat) லொக் செய்து பயன்படுத்தக்கூடிய வசதி அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது.

Chat Lock

கடவுச்சொல் (password) அல்லது பயோமெட்ரிக் ஆத்தாடிக்கேஷன் (biometric authentication) முறையில் இந்த குறிப்பிட்ட chatஐ லொக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்மூலம் Chatன் தகவல்களை ரகசியமாக பேண முடியும்.

இந்த வசதியின் மூலம் மெசேஜ் அனுப்பும் நபரின் பெயர் அந்த மெசேஜ் என்பனவற்றை நோட்டிபிகேஷனில் இருந்து மறைத்து வைக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக ஏற்கனவே ஒட்டுமொத்த வாட்ஸ் அப் செயலியையும் பாஸ்வேர்ட் அல்லது பயோமெட்ரிக்ஸ் முறையில் கட்டுப்படுத்த முடியும் என்பதுடன், அனுமதி இன்றி whatsapp மெசேஜ்கள் பார்வையிட முடியாது என்ற அம்சம் காணப்படுகின்றது.

மேலும் இந்த வசதியை மேம்படுத்தும் நோக்கில் குறிப்பிட்ட Contact லிஸ்டில் இருக்கின்ற நபருடனான Chatஐ ரகசியமாகப் பேணுவதற்கு whatsapp புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது.

வாட்ஸ் அப்பில் எவ்வாறு Chat லொக் செய்வது?

வாட்ஸ் அப்பில் லேட்டஸ்ட் வெர்ஷனை டவுன்லோட் செய்து கொள்ளவும்

லாக் செய்ய வேண்டிய குறிப்பிட்ட சாட்டிற்கு செல்லவும் (Go to the specific chat that you would like to lock)

ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்யவும் (Click on the profile picture)

அதன் போது Chat லாக் என்னும் ஓர் ஆப்ஷன் தென்படும் (You will see a new option called “chat lock” right below the disappearing message menu)

அந்த ஆப்ஷனை எனேபிள் செய்வதன் மூலம் குறிப்பிட்ட ஒரு நபருடனான வாட்ஸ்அப் Chatகளை ரகசியமாக பேண முடியும். (Enable chat lock and authenticate using your phone password or biometrics)

whatsapp ஹோம் பேஜை ஸ்வேப் செய்வதன் மூலம் லாக் செய்யப்பட்ட Chatகளை பார்வையிட முடியும்.  (Swipe down on the WhatsApp home page to access all the locked chats)