போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 11 பேர் கைது!

   போலி ஆவணங்களை சமர்ப்பித்து ஜோர்ஜியா செல்ல முயற்சித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஒன்பது ஆண்களையும் இரண்டு பெண்களையும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் 36 வயதுடைய மன்னாரைச் சேர்ந்தவராவார்.

ஏனைய சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 31, 36, 33, 34 மற்றும் 22 வயதுடையவர்களாவர்.

மேலும் கைதானவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஇலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
Next articleசீனாவில் அதிகரிக்கும் வெப்ப நிலையால் திண்டாடும் மக்கள்