இளையதளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தெறி படத்தில் நடித்து முடித்துள்ளார்.இப்படம் தமிழ் புத்தாண்டு வெளிவரவுள்ள இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்ஸன் நாயகியாக நடித்துள்ளனர்.அடுத்ததாக விஜய் தனது 60வது படத்தில் பரதன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் படத்தில் நடிக்கவுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கவுள்ள இப்படத்தில் கே.எல் பிரவின் எடிட்டிங் செய்யவுள்ளார்.படப்பிடிப்பு தொடங்கவுள்ள நிலையில் பரதன், சந்தோஷ் நாரயணன், பிரவீன், ஒளிப்பதிவாளர் சுகுமார் ஆகியோர் இன்று இன்று விஜய்யை அவரது இல்லத்தில் நேரடியாக சந்தித்துள்ளனர்.விஜய்-60 படம் தொடங்குவதற்கு முன்பாக விஜய்யிடம் வாழ்த்து தெரிவிப்பதற்காக சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.