யாழில் சப்ரைஸ் கிப்ட் கொடுத்துவிட்ட கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ! சப்ரைஸ் கிப்ட் குடுக்க வந்தவனுடன் மனைவி ஓட்டம் !

சப்ரைஸ் கிப்ட் குடுக்கச் சென்றவனுடன் குடும்பப் பெண் ஓடிச்சென்ற சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பகிரப்படுவருகின்றது.

யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆணொருவருக்கு சிறிதுகாலம் முன்னரே திருமணம் நடந்தது.

திருமணம் முடித்து சிறிது காலத்தில் ஏஜென்சிக் காரனை பிடித்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு தாவியுள்ளார் குறித்த மாப்பிள்ளை.

இதன் பின்னர் அவர்களது இல்லறம் whatsapp ஊடாக நல்லறமாக தொடர்ந்து வந்துள்ளது.

மனைவியின் பிறந்த நாள் நெருங்கவும் மனைவிக்கு சப்பிறைஸ் கொடுக்க விரும்பியுள்ளார் அந்த அப்பாவி மாப்பிள்ளை.

இதற்கான தேடலில் facebook இல் யாழ்ப்பாணத்தை சேர்ந்த Surprise Gift Delivery செய்யும் ஒருவன் அறிமுகமாகியுள்ளான்.

பெடியன் வெள்ளையாக இருப்பதால் நல்லவனாக இருப்பான் என நம்பி சிறப்பாகவேலையை முடிக்கலாம் என எண்ணியுள்ளார் மாப்பிள்ளை.

பின்னர் ஒரு தொகை பணத்தை அனுப்பியும் வைத்துள்ளார்.

மனிசியின் பிறந்த நாள் அன்று அந்த குறித்த சப்றைஸ் காரன் மிக்கிமவுஸ் சட்டையை போட்டுக்கொண்டு போய் ஆட்டம் ஆடி கண்டோசும் கேக்கும் கொடுத்துள்ளான். அதன் பின்னர் சில கேள்விகளை கேட்டு அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளான் அந்த சப்பிறைஸ் காரன்.

பின்னர் குறித்த வீடியோவை தனது பேஸ்புக்கில் பகிரப்போவதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கான பேர் அதை பார்ப்பார்கள் என்றும் கூறியுள்ளான்.

அத்துடன் குறித்த பெண்ணை Tag செய்து போடவேண்டும் என கூறி அப் பெண்ணிடம் பேஸ்புக் ஐடியை வாங்கி friend ஆகியுள்ளான்.

வெறும் ரெண்டு மாசம் தான் எப்படியோ தூண்டிலை போட்டு குறித்த பெண்ணை மடக்கி மாப்பிள்ளை போட்ட சீட்டுக் காசையும் சேர்த்து கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான்.

சப்றைஸ் கொடுக்க விரும்பிய மாப்பிள்ளைக்கு பெரிய சப்றைஸ் ஆக திரும்ப கிடைத்துள்ளது.

விழிப்புடன் இருப்பதற்காக ஒருசில பேருக்கான பதிவு, இதனூடாக எல்லாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை..(social media)

Previous articleஇலங்கையில் கொரொனோ தொற்று காரணமாக 16 பேர் உயிரிழப்பு!
Next articleநாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!