நாட்டில் உள்ள வணிக வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கி பிறப்பித்துள்ள உத்தரவு!

அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்கும் இலங்கை மத்திய வங்கி (CBSL) புதிய உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரவு வைப்புத் தேவைகள் தொடர்பாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திரும்பப் பெறப்பட்ட பண வரம்பு வைப்புத் தேவைகள்
இந்த உத்தரவின்படி 19 மே 2022 மற்றும் 16 பெப்ரவரி 2023 திகதியிட்ட கடன் பத்திரங்களுக்கு எதிரான பண வரம்பு வைப்புத் தேவைகள் திரும்பப் பெறப்பட்டதாக உரிமம் பெற்ற வணிக வங்கிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் மத்திய வங்கியின் நாணய சபையினால் மேற்கொள்ளப்பட்ட உத்தரவுகள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மீளப் பெறப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Previous articleயாழில் சப்ரைஸ் கிப்ட் கொடுத்துவிட்ட கணவனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த மனைவி ! சப்ரைஸ் கிப்ட் குடுக்க வந்தவனுடன் மனைவி ஓட்டம் !
Next articleஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானம்!