அனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானம்!

அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றிற்காக பயன்படுத்தப்படும் மாதாந்திர அலகுகளின் எண்ணிக்கை அடங்கிய தகவல் அறிக்கையை கோருவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

கடந்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான 06 மாத காலப்பகுதிக்கு மாதாந்தம் செலவிடப்பட்ட அலகுகளின் தரவுகளை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொது நிர்வாக அமைச்சின் சுற்றறிக்கை 

தேசிய எரிசக்தி சாத்தியங்கள், உத்திகள் மற்றும் சாலை வரைபடம் தொடர்பான அமைச்சரவை துணைக் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்தும் நோக்கத்திற்காக இந்தத் தரவு சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் நீர், மின்சாரம், எரிபொருள் மற்றும் தொலைபேசி பாவனை தொடர்பான தரவுகளை ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மேலும், இவ்வருடத்தின் அடுத்த 06 மாதங்களுக்கு எரிசக்தி துறையில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள அடையாளம் காணப்பட்ட பணிகள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அமைச்சுகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.