வான் ஒன்றிற்குள் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட பாடசாலை மாணவி!

பிலியந்தலையில் வேன் ஒன்றுக்குள் வைத்து ஆறு வயது ஒன்பது மாதமான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பாடசாலை வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு மாணவியின் முகத்தில் எதனையோ தெளித்துவிட்டு மயக்கமடைய செய்த பின்னர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும் விசாரணையில் அது உறுதி செய்யப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Previous articleஅனைத்து அரச நிறுவனங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய தீர்மானம்!
Next articleஇனி வீட்டில் இருந்தே கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்!