சமுர்த்தி வங்கிகள் தொடர்பில் அரசு மேற்கொண்டுள்ள தீர்மானம்!

  மத்திய வங்கியில் சமுர்த்தி வங்கி முறையை நுண்நிதி வங்கி அமைப்பாக பதிவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது. அஸ்வெசுன பயனை மக்களுக்கு வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய நிதியமைச்சில் நேற்று (17) இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்தார்.

இதன் கீழ் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கிகள் உத்தரவாத நடவடிக்கையில் உள்வாங்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த கலந்துரையாடலில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்

Previous articleஇனி வீட்டில் இருந்தே கடவுச் சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்!
Next articleயாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவேந்தல்