தங்கத்தின் இன்றைய நிலவரம்

இலங்கையில், தங்கத்தின் விலையில் இன்றும்(18.05.2023) வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடந்த இரண்டு வாரங்களுடன் ஒப்பிடுகையில், இலங்கை சந்தையில் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 11 ஆயிரம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்றைய தங்க நிலவரம்
இதன்படி இன்றைய தினம்(18.05.2023) தங்க அவுன்ஸின் விலை 611,266 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,570 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 172,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 158,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,780 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 18,880 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 151,000 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Previous articleயாழ் பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் 14ம் ஆண்டு நினைவேந்தல்
Next articleஇன்றைய ராசிபலன்19.05.2023