யாழில் வடமாகாண ஆளுநருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்

வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் நியமனத்துக்கு எதிராக இன்று (19) காலை யாழ் ஆளுநர் அலுவலகத்தின் முன்னால் பாரிய ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள அமைப்புகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.

வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம்.சார்ள்ஸும், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமானும், வடமேல் மாகாண ஆளுநராக லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தனவும் கடந்த புதன்கிழமை (17.05.2023) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 

Previous articleவழி கேட்க்க சென்ற சிறுவன் பாலியல் துஷ்பிரயோகம்
Next articleவடமேல் மாகாண பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக மருத்துவர் சத்தியமூர்த்தி நியமனம்!