பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்கு 95 வீதமான பாடப்புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்த விநியோகம் இன்னும் இரண்டு வாரங்களில் நிறைவடையும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பொருளாதாரச் சிரமங்களை எதிர்நோக்கும் மாணவர்களுக்கும் உயர்தர கல்விக்கான புலமைப்பரிசில்களை வழங்கும் நிகழ்வில் நேற்று உரையாற்றிய அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தகங்களை அச்சிட உதவிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நன்றி தெரிவித்தார். 2023 ஆம் ஆண்டிற்கான பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கான பொருட்களை வழங்குவதில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் எங்களுக்கு ஆதரவளித்தது.

இதன்போது மூன்று மொழிகளில் 350 வகையான பாடப்புத்தகங்களை அச்சிட அரசாங்கம் 16 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இது முந்தையதை விட நான்கு மடங்கு அதிகம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அரச அச்சுக் கழகம் இந்தியா வழங்கிய உதவியின் மூலம் தேவையான 45% புத்தகங்களை மூலப் பொருட்களைப் பெற்று வழங்கியது. மீதமுள்ள 55% 22 தனியார் அச்சக நிறுவனங்களால் அச்சிடப்படுகிறது.

Previous articleவடக்கு ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இருந்து மந்திரிக்கப்பட்ட பொருட்கள் மீட்பு!
Next articleதுபாயில் இருந்து நாட்டிற்கு தங்கம் கடத்தும் முயற்சி முறியடிப்பு!