ரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்கும் கனடா

 ரஸ்யாவின் மீது மேலும் தடைகள் விதிக்கப்படுவதாக கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

ஜப்பான் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வரும் ஜீ7 நாடுகள் தலைவர்கள் மாநாட்டில் பங்குபற்றும் பிரதமர் இதனைக் குறிப்பிடடுள்ளார்.

உக்ரைன் மீது சட்டவிரோத இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ரஸ்யா மீது 70 தடைகள் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களின் பிரகாரம் உக்ரைனுக்கு தொடர்ச்சியாக ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்ய போருடன் தொடர்புடைய தரப்புக்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்படுவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஏனைய ஜீ7 நாடுகளும் ரஸ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Previous articleதுபாயில் இருந்து நாட்டிற்கு தங்கம் கடத்தும் முயற்சி முறியடிப்பு!
Next articleகனடாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இண்டு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!