கனடாவில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இண்டு இந்திய மாணவர்கள் உயிரிழப்பு!

 கல்வி கற்பதற்காக பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பி வைத்திருந்த இரண்டு இந்தியக் குடும்பங்களுக்கு ஒரே நேரத்தில் துக்க செய்திகள் வந்துள்ளன.

கடந்த வாரம், கனடாவின் தலைநகரான Ottawaவில் நிகழ்ந்த விபத்து ஒன்றில், இந்திய மாணவர்கள் இருவர் பலியாகினர்.

கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, அதிகாலை 5.30 மணியளவில், Ottawaவில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில், பஞ்சாபைச் சேர்ந்த Balwinder Singh (21) மற்றும் Sachin Chugh (22) ஆகிய இரண்டு இளைஞர்கள் பலியாகினர்.

பிள்ளைகள் பலியான செய்தியறிந்து துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் அவர்களுடைய பெற்றோர்.

இரண்டு மாணவர்களுக்கும் கனடாவிலேயே இறுதிச்சடங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் படித்து முடித்து தங்களை கனடாவுக்கு அழைத்துக்கொள்வார்கள் என்ற ஆசையிலிருந்த அவர்களுடைய பெற்றோர், தற்போது அவர்களுடைய அஸ்திக் கலசங்கள் இந்தியாவுக்கு வருவதை எதிர்நோக்கிக் கவலையுடன் காத்திருக்கிறார்கள்.

மரணமடைந்த பிள்ளைகளுடைய முகத்தைக் கூட இறுதியாக பார்க்கமுடியாத நிலைமை, அந்தக் குடும்பங்களுக்கு ஆறாக் காயமாக, நிரந்தர வடுவாக அமைந்துவிடக்கூடும்.  

Previous articleரஷ்யா மீது மேலும் தடைகளை விதிக்கும் கனடா
Next articleஇன்றைய ராசிபலன் 20.05.2023