தாம் சாகும்வரை பதவியிலிருப்பதற்காக ஒரு சிலர் அலைவதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க.
காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் அரசியல் 10 வீதத்துககும் குறைவானோரே நேர்மையான கனவான்கள் எனவும் அதிகமானவர்கள் ஒரு தடவை பதவியை ருசி பார்த்ததும் அதன் பின் சாகும் வரை பதவிக்காக அலைகிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அனைத்து மததத் தலைவர்களும் மனிதர்களாக வாழும்படியே தம் சமூகத்துக்குப் போதனை செய்து வருவதாகவும் நமது தேசியத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஏனைய மதங்களில் உள்ள நல்லவற்றை எடுத்துக்கொள்வதிலும் எந்தப் பாதிப்புமில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.