மின்னல் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு!

பதுளையில் நபர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச் சம்பவம் பதுளை ரிதிமாலியாத்த போலீஸ் பிரிவிற்குட்பட்ட மொறான பகுதியில் இடம் பெற்றுள்ளது.

இப் பகுதியில் குறித்த நபர் நீர் வடிகானுக்கு அருகில் நின்று கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் மின்னல் தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் மின்னல் தாக்கியதில் அவருடைய கைப்பேசியும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீதவான் பரிசோதனைக்காக சடலம் அவ் இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன் 20.05.2023
Next articleஅரச ஊழியர்களுக்கான மகிழ்வான செய்தி!