பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரை தாக்கிய மாணவர்

  கொழும்பு – பம்பலப்பிட்டி பிரதேச பாடசாலையொன்றில் 10ஆம் ஆண்டில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் வகுப்பு ஆசிரியர் ஒருவரை தாக்கியதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஆசிரியரும் மாணவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலையின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரால் தனது இளைய சகோதரர் தாக்கப்படுவதை அறிந்த அவரது  சகோதரர் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியர் ஒருவரை நாற்காலியை தூக்கி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleவானிலை தொடர்பான அறிவிப்பு!
Next articleமின் கட்டணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை!