மின் கட்டணம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் நடவடிக்கை!

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின் கட்டணத் திருத்தத்தின்படி குறைந்த மின்சாரம் பயன்படுத்துபவர்களின் ஆரம்ப அலகுகளிலும், ஹோட்டல் துறையிலும் மின்சார அலகின் விலை ஓரளவு குறையும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்விரு வகைகளிலும் விலை குறைப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்ட நிலையில் மின் கட்டண திருத்தம் ஜூலை 01ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

சாகல ரத்நாயக்க மற்றும் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

குறைந்த மின் யூனிட்களை பயன்படுத்தும் குழுவில் சுமார் 17 லட்சம் பேர் உள்ளதாகவும், மின்கட்டண உயர்வால் மின் பயன்பாடு ஓரளவுக்கு குறைந்துள்ளதாகவும் இந்த விவாதத்தில் தெரியவந்துள்ளது.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் மற்றும் நிலக்கரி இறக்குமதி செலவு குறைவதன் அடிப்படையில் மின் கட்டணத்தை குறைக்க மின்சார சபை தீர்மானித்துள்ளது.

ஹோட்டல் தொழில்துறையின் மின் கட்டணம் 40% குறைக்கப்படும் என்றும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரை தாக்கிய மாணவர்
Next articleவைத்திய கலாநிதி சத்திய மூர்த்தியின் பதவியை மீள பெற முயற்சி!