வைத்திய கலாநிதி சத்திய மூர்த்தியின் பதவியை மீள பெற முயற்சி!

  மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக வைத்திய கலாநிதி தங்கமுத்து சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவரின் நியமனத்தை மீளப் பெறுதுவதற்கு வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் பிரயத்தனம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆளுநருக்கு கடும் அழுத்தம்

யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக மத்திய அமைச்சின் பரிபாலகத்திற்குள் உள்ள வைத்திய கலாநிதி சத்தியமூர்த்தி, மாகாண சபையின் கீழ் செயல்படும் நிறுவனத்துக்கு பதில் சுகாதார பணிப்பாளராக நேற்று வெள்ளிக்கிழமை கடமைகளை பொறுப்பேற்றார்.

அவரது நியமனம் முறையற்றது என பிரச்சனைகள் எழுந்துள்ளது. இந்த நிலையில் வடமாகாண ஆளுநருக்கும் அது தொடர்பில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறது.

தமிழ் கட்சிகளின் ஆதரவுடன் புதிய வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட பி.எஸ்.எம்.சாள்ஸ் பதவியேற்றுள்ளார் வடமாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடமாகாண முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவரஜா, ஆகியோர் மாகாண பதில் சுகாதாரப் பணிப்பாளர் நியமனம் தொடர்பில் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் ஆளுநர் சாள்ஸ் சுகாதார அமைச்சின் செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு புதிய பதில் பணிப்பாளர் ஒருவரை நியமிக்குமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.