இலங்கையின் கடன் பிரச்சினை தொடர்பில் ஜி-7 நாடுகள் வெளியிட்டுள்ள புதிய செய்தி!

இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத் திட்டங்களை ஏற்றுக்கொள்வதாக ஜி-7 உச்சி மாநாட்டில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலங்கையின் கடன் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்வதாக ஜி-7 உச்சி மாநாட்டின் கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நடுத்தர வருமான நாடுகளின் கடன் பிரச்சினைகளை தீர்க்க பலதரப்பு முயற்சிகளுடன் கூடிய வெற்றிகரமான முறைகள், மற்றும் அவைகள் விரைவான தீர்வாகவே தேவைப்படுவதாகவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Previous articleயாழ் பல்கலையில் மூவருக்கு பதவி உயர்வு!
Next articleஅதி நவீன நகரமாக கண்டியை மேம்படுத்த உதவியை எதிர்பார்க்கும் ஜனாதிபதி!