அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவர் நியமனம்

அனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய ஏற்பாட்டாளராக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் இணை சுகாதார பீடத்தைச் சேர்ந்த மதுஷன் சந்திரஜித் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தனது கையொப்பத்துடன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் நேற்று (20) இடம்பெற்ற அமர்வின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇன்றைய ராசிபலன்21.05.2023
Next articleசென்னை மற்றும் இலங்கை கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!