சென்னை மற்றும் இலங்கை கப்பல் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

இலங்கைக்கு சென்னை துறைமுகத்திலிருந்து கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல், சென்னையிலிருந்து எதிர்வரும் ஜூன் 5ஆம் திகதி முதல், இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளது.

இந்தக் கப்பலானது யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, , கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது.

3 நாள் பக்கேஜில் பயணிக்க, தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து 24 மணி நேரத்திற்குள், இந்தப் கப்பல் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களுக்கு சென்று வரவுள்ளது.

சென்னை துறைமுகத்தின் 7ஆவது நுழைவாயில் வழியாக, பயணியர் அனுமதிக்கப்பட உள்ளனர்.

மேலும், இந்த கப்பலில், ஒரே நேரத்தில் 1, 600 பேர் வரை பயணிக்க முடியும்.

Previous articleஅனைத்து பல்கலைக்கழகங்களுக்கிடையிலான மாணவர் ஒன்றியத்தின் புதிய தலைவர் நியமனம்
Next articleவெளிநாடொன்றில் மனைவிக்கு மொட்டையடித்த கணவர்