மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புக்கள்.

sri-lanka-armyஅண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இனம் புரியாத தொலைபேசி அழைப்புக்களினால் பணம் பறித்தல், கொலை மிரட்டல், என பல முயற்சிகள் இடம் பெறுகின்றது.

அதிலும் குறிப்பாக சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களுடைய வீடுகளுக்கு கையடக்க தொலைபேசி அழைப்புக்கள் மூலம் தொடர்பு கொண்டு, குடும்ப அங்கத்தவர்களை பயமுறுத்தி சிறையில் உள்ள உங்கள் முன்னாள் போராளி உறவினரை விடுதலை செய்ய முடியும் என்றும், அதற்கு பணம் லட்சக்கணக்கில் செலவாகும் என்றும், அந்த பணத்தை எங்ஙகளுக்கு தந்தால் சிறையில் உள்ள உங்கள் முன்னாள் போராளி உறவினரை விடுதலை செய்வோம் என கூறுகின்றார்களாம்.

சில இலக்கத்தில் தொடர்பு கொள்ளும் நபர்களில் ஒரு பெண்ணும் கதைப்பதாகவும், குறித்த இந்த விடயத்தை பொலிஸாரிடமோ, வேறு எவரிடமோ தெரியப்டுத்தினால் கொலை செது விடுவதாகவும் கூறி பணத்தை அவர்கள் கூறும் இடத்திற்கு தனியாக எடுத்து வரும் படியும், பணம் கிடைத்த உடன் சிறையில் உள்ள உங்கள் முன்னாள் போராளி உறவினரை விடுதலை செய்து விடுவதாகவும் கூறியுள்ளார்கள்.

இது போன்ற சம்பவங்கள் அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. பயத்தின் காரணமாக இக்குடும்பங்களை சார்ந்தவர்கள் எதுவித முறைப்பாடுகளும் செய்ய முடியாமல் இருப்பதாகவே உணர முடிகிறது.

தனித் தமிழில் உரையாடும் இவர்களை கண்டுபிடிக்க வேண்டியது பொலிஸாரின் கடமை. அத்துடன் மாவட்ட த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களும் நிட்சயம் இக்குடும்பங்களின் நிலமைகளை கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது, சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளின் குடும்பங்களைப் பொறுத்தமட்டில் எந்த விதமான மாத வருமானங்களும் இல்லாமல் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவிக்கும் இத்தருணத்தில் இப்படிப்பட்ட தொலைபேசி அழைப்புக்கள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் உள்ளது.

Previous articleநியூசிலாந்தில் கடுமையான நில நடுக்கம், 200 பேர் பலி, தொடரும் பதட்டம்…
Next articleசைத் அல் ஹுசைன் மீது வழக்கு….!