போதையில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்கள்

பாணந்துறையில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் போதையில் அநாகரீகமாக நடந்துகொண்ட இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இரண்டு மைனர் சிறுமிகளும், ஆண் ஒருவரும் இளம் பெண் ஒருவரும் மற்றும் இரண்டு இளைஞர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் குழுவொன்று அநாகரீகமாக நடமாடுவதாக பிரதேசவாசிகள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவு நிலையப்பொறுப்பதிகாரி இவர்களை கைது செய்துள்ளனர்.

இந்த குழுவினர் பொலிஸாரை கண்டதும் காரில் தப்பியோட முயற்சித்த நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று சிறுமிகளும் நாகரீகமற்ற ஆடைகளை அணிந்திருந்ததாகவும், அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த தயங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Previous articleவெளிநாடொன்றில் மனைவிக்கு மொட்டையடித்த கணவர்
Next articleமீண்டும் சுதந்திர கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன