மீண்டும் சுதந்திர கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன

சுதந்திர கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்படுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அதில் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசாவை ஜனாதிபதி வேட்பாளராக எதிர்க்கட்சி அறிவித்துள்ள போதிலும், அவருக்கு ஆதரவை வழங்குமாறு இதுவரையில் தம்மிடம் எந்தவொரு கோரிக்கையும் விடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous articleபோதையில் மோசமான செயலில் ஈடுபட்ட பெண்கள்
Next articleசாரதிகளுக்கான முக்கிய அறிவிப்பு!