நுவரெலியா கடை ஒன்றில் தீ விபத்து!

நுவரெலியா நகரில் கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் சமையல் எரிவாயு கசிந்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதில் மூவர் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வழக்கம் போல் உணவகத்தில் சமையல் வேலை செய்வதற்கு எரிவாயு அடுப்பை செயற்படுத்தியபோது சமையல் எரிவாயு அடுப்பில் வாயு கசிந்து தீ விபத்து ஏற்படுள்ளது.

இதையடுத்து ஹோட்டலில் தொழில் புரியும் ஊழியர்களும் ஏனைய வர்த்தக நிலைய ஊழியர்களும் ஒன்றிணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

அத்துடன் தீயில் சிக்கி காயமடைந்த மூவரும் 42, 44, 63 வயதுடையவர்கள் எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Previous articleசொக்கலேட்டை கொடுத்து பாடசாலை மாணவியை கடத்த முயற்ச்சி!
Next articleயாழில் சூனியம் நீக்குவதாக கூறி யுவதிக்கு மது பருக்கி வன்புணர்ந்த சாமியார்!