சைத் அல் ஹுசைன் மீது வழக்கு….!

zusinஇலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டதன் மூலம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் ஐ.நா விதிகளை (13.2) மீறியுள்ளதாகக் குறிப்பிட்டு அதற்கெதிராக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றில் வழக்குத் தொடர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக அறியமுடிகிறது.

கனடா, அவுஸ்திரேலியா மற்றும் இத்தாலியில் வாழும் இலங்கையர்கள் குழுவொன்றே இவ்வாறு முயற்சியெடுத்து வருவதோடு இது தொடர்பில் ஐரோப்பிய நீதிபதிகள் மூவரின் அபிப்பிராயம் அறியும் சந்திப்புகளையும் நடாத்தியுள்ளனர்.

இலங்கையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகையை மஹிந்த ஆதரவாளர்கள் தீவிரமாக எதிர்த்ததோடு இத்தாலியோடு நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் விமல் வீரவன்சவின் கட்சியினர் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் மேற்கொண்டிருந்தனர். இந்நிலையிலேயே இவ்வாறான முயற்சியொன்று மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleமட்டக்களப்பில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புக்கள்.
Next articleதிருமணத்துக்கு மறுத்ததால் காதலியை கொன்று வீட்டில் புதைத்த காதலன்