யாழில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

இன்று (21) மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது.

அதிஷ்டவசமாக இ.போ.ச.பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பேருந்தில் இ.போ.ச ஊழியர்கள் ஒரு சிலர் மாத்திரமே பயணித்திருந்தனர்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை தூக்கி வீதிக்கு கொண்டு வந்தனர்.

குறித்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் பேருந்தின் படிகள் பலத்த சேதத்துக்கு உள்ளாகியுள்ளன.

Previous articleயாழில் சூனியம் நீக்குவதாக கூறி யுவதிக்கு மது பருக்கி வன்புணர்ந்த சாமியார்!
Next article18 வயது மாணவியுடன் விடுதியில் தங்கிய ஆசிரியர் நையப்புடைப்பு!