18 வயது மாணவியுடன் விடுதியில் தங்கிய ஆசிரியர் நையப்புடைப்பு!

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல பாடசாலையொன்றின் ஆசிரியர் ஒருவர், உயர்தர மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்ற போது கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டார் என குறிப்பிடப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியிலுள்ள பாடசாலையொன்றின் ஆசிரியரே தாக்கப்பட்டுள்ளார். சத்துருக்கொண்டான் பகுதியை சேர்ந்த இந்த ஆசிரியர், அந்த பகுதியில் தனியார் வகுப்புக்களையும் நடத்தி வந்துள்ளார்.

அவரது தனியார் கல்வி வகுப்பில் படித்து வந்த கிரான் பகுதியை சேர்ந்த 18 வயதான மாணவியொருவருடன் பாசிக்குடாவிலுள்ள விடுதியொன்றுக்கு சென்ற போதே கையும் மெய்யுமாக சிக்கி, தாக்கப்பட்டதாக அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று (18) இந்த சம்பவம் நடந்நதது.

அவர்களில் சந்தேகமடைந்த முச்சக்கர வண்டி சாரதிகள், விடுதி வரை பின்தொடர்ந்து சென்று, விடுதிக்குள் வைத்து ஆசிரியரையும், மாணவியையும் பிடித்தாக தெரிவித்துள்ளனர்.

ஆசிரியரை தாக்கி அதனை காணொளியாக பதிவிட்டு, சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

மாணவியின் பெற்றோர் அழைக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Previous articleயாழில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!
Next articleஉயிரிழந்ததாக கூறப்பட்ட பெண் இறுதி நேரத்தில் உயிருடன் இருந்ததால் பரபரப்பு!