கிளிநொச்சியில் மீட்கப்பட்ட 500 கிலோகிராம் நிறையுடைய கிபீர் விமானக் குண்டு !!

கிபீர் தாக்குதல் விமானத்திலிருந்து ஏவப்பட்ட சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்திவாய்ந்த விமானக் குண்டொன்று கிளிநொச்சி தர்மபுரம் – மயில்வானகம் காட்டுப்பகுதியில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.

யுத்தக்காலத்தில் விடுதலைப் புலிகளை இலக்குவைத்து கிபீர் விமானத்தால் கீழே ஏவப்பட்ட குண்டே வெடிக்காத நிலையில் இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.பிரதேசவாசியினால் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.

3 அடி நீளமும் 3 அடி சுற்றுவட்டமும் கொண்ட இந்த குண்டு இன்றைக்கு 15 வருடங்களுக்கு முன்னர் கிபீர் விமானத்தால் கீழே ஏவப்பட்டுள்ளது.

Previous articleகடந்த வாரத்தில் 189 பில்லியன் ரூபாய்க்கு மேல் அச்சிட்ட மத்திய வங்கி
Next articleகாலையில் தயிர் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்