திருமணத்துக்கு மறுத்ததால் காதலியை கொன்று வீட்டில் புதைத்த காதலன்

lovers_2736645hஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குர்ரம்கொண்டா மண்டலம் சுங்கி ரெட்டிகாரி பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் சேமநாராயண ரெட்டி. இவர் அதே ஊரில் ஒரு கல்லூரியில் பேராசிரியராக உள்ளார்.

இவரும், அதே பகுதியைச் சேர்ந்த நபிதா என்ற பெண்ணும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் பெங்களூரில் வேலை கிடைத்து இருப்பதாக கூறி நபிதா திருப்பதி வந்தார். அங்கு ராஜன்னாபார்க் அருகே வீடு எடுத்து நபிதாவை சேமநாராயண ரெட்டி குடியமர்த்தி அடிக்கடி அவர்கள் சந்தித்து கொண்டனர்.

அதோடு அங்குள்ள மோட்டார் வாகன ஷோரூமில் காதலிக்கு சேமநாயுடு வேலை வாங்கி கொடுத்தார். இந்த நிலையில் நபிதாவுக்கு ஷோரூமில் வேலை பார்க்கும் ஒரு வாலிபர் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்தார். அதில் அந்த வாலிபருடன் நபிதா பல்வேறு இடங்களில் சுற்றினார்.

இதை அறிந்த சேம நாராயண ரெட்டி காதலியை சந்தித்து தன்னை திருமணம் செய்ய வற்புறுத்தினார். ஆனால் அவரை திருமணம் செய்ய நபிதா மறுத்து விட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சேமநாராயணா ரெட்டி காதலியை தனது வீட்டுக்கு அழைத்து அவரை கொன்றார். பின்னர் பிணத்தை தனது வீட்டுக்குள்ளேயே புதைத்து விட்டார்.

இதன்பின் திருப்பதி வீட்டை அவர் காலி செய்து விட்டார். நபிதா வேலைக்கு வராததால் நிறுவனத்தினர் அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போதுதான் நபிதா பெங்களூரில் வேலை பார்க்கவில்லை. திருப்பதியில் இருப்பது அவரது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் திருப்பதி மேற்கு போலீசில் புகார் செய்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் காதலியை சேமநாராயண ரெட்டி கொன்று வீட்டில் புதைத்தது தெரியவந்தது. இதையொட்டி காதலன் கைது செய்யப்பட்டார்.

வீட்டில் புதைக்கப்பட்ட பிணம் இன்று தோண்டி எடுக்கப்படுகிறது.

காதலர் தினத்தன்று காதலியை கொன்று புதைத்த செய்தி சித்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Previous articleசைத் அல் ஹுசைன் மீது வழக்கு….!
Next articleஎவரும் எட்ட முடியாத இமாலய சாதனை படைத்த தெறி!