இம்முறை சாதரணதர பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவிக்கு நேர்ந்த சோகம்!

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த பாடசாலை மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

முந்தலம – புளிச்சங்குளம் குளத்தில் நீராடச்சென்ற இந்த மாணவி நேற்று (22.05.2023) உயிரிழந்துள்ளார்.

இவர் உடப்புவையில் வசிக்கும் 17 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி தனது நண்பிகள் நான்கு பேர் மற்றும் நண்பியின் உறவினர் ஒருவருடன் ஏரியில் நீராடச்சென்ற நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleவீதியில் கண்டெடுத்த பணத்தை உரியவர்களிடம் ஒப்படைத்து நெகிழ்ச்சியை ஏற்ப்படுத்திய இளைஞர்கள்
Next articleயாழில் நீண்ட நாளாக தேடப்பட்டு வந்த பெண் கைது!