திருகோணமலையில் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொண்ட பொலிசார்!

 திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜமாலியா பகுதியில் இன்று (23) அதிகாலை 5 மணிமுதல் திடீர் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஜமாலியா பகுதியில் பொலிசார் மற்றும் முப்படையினரும் குவிக்கப்பட்டு சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

திங்கட்கிழமை (22) புல்மோட்டை பகுதியில் வைத்து பெருமளவான டைனமைற் குச்சிகளும் ஏனைய பொருட்களும் கைப்பற்றப்பட்டதையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது அவை ஜமாலியா பகுதிக்கு கொண்டு செல்வதற்காக வைத்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.

அதனை தொடர்ந்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுவருவதாக தெரிய வருகின்றது. குறித்த பகுதியில் முப்படையினரும் பொலிஸாரும் பெருமளவான குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Previous articleபாடசாலை மாணவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
Next articleபாடசாலை மாணவர்களுக்கு பொலிசார் விடுத்துள்ள அறிவித்தல்!