வடக்கு விரையும் புதிய ஆளுநர்

jaffna_gunarவட மாகாண புதிய ஆளுநராக ரெஜினோல்ட் குரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இன்று சத்தியப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் நிலையில், இந்த சத்தியப் பிரமாணம் ஜனாதிபதி வாசஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆசிரியராக கடமையாற்றிய ரெஜினோல் குரே, 1988ஆம் ஆண்டு மேல் மாகாண சபை உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டு அரசியலுக்குள் பிரவேசித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதி அமைச்சராகவும், அமைச்சராகவும் கடமையாற்றிய ரெஜினோல் குரே, மேல் மாகாண முதலமைச்சராகவும் செயற்பட்டுள்ளார்.

நியமனம் வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி செயலாளர் பி.பீ.அபேகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் 30 ஆண்டுகளின் பின் 773 இலக்க பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்
Next articleமைத்துனரின் ஆணுறுப்பை அறுத்து பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற பெண்